Whole Body after Death
முழு உடல்கொடை (உடல்தானம்) :
- உயிருடன் உள்ள ஒருவர் முழு உடல் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலை தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம்
- இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும். விபத்து என்றால் முழுஉடல்தானத்திற்கு உடல் பெறப்படமாட்டாது
- உடல் உறவினர்களிடம் அளிக்கப்படாது.
- உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்
- அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும், இதய ஒரு போக்கிகளும் (இதய வால்வுகள்) எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்
- பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால், இதய ஒரு போக்கிகளால் பல பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு.
- உறுப்பு தானம் என்பது வேறு !! உடல் தானம் என்பது வேறு. உறுப்பு தானம் என்பது மூளைச்சாவு எற்பட்டால் மட்டுமே. அதன் மூலம் மற்றொரு உயிரை காக்கலாம். உடல் தானம் என்பது இயற்கை மரணம் ஏற்பட்டால் மட்டுமே.
- உடல் தானம் குறித்த வழிமுறைகள் இந்த பக்கத்தில் உள்ளன.